இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமனம்!

 | 
Indian women's Cricket Captain leader as appointed as SMRITI MANDHANA

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகியுள்ளதைத் தொடர்ந்து, புதிய முழுநேர கேப்டனாக நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.

29 வயதான ஸ்மிருதி மந்தனா ஏற்கனவே இந்திய அணியை 18 டி20 போட்டிகளிலும், 4 ஒருநாள் போட்டிகளிலும் கேப்டனாக வழிநடத்திய அனுபவம் பெற்றுள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், அணியின் தூண்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
 
சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி, பெண்கள் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வழிநடத்தி, 2024 மற்றும் 2026 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் அந்த அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார்.
 
பேட்டிங்கில் தொடர்ச்சியாகச் சிறப்பான பங்களிப்பை வழங்குவதுடன், இந்திய அணியை வெற்றிகரமாக முன்நடத்திச் செல்லும் பெரிய பொறுப்பை தற்போது அவர் முழுமையாக ஏற்றுள்ளார்.

Tags