இந்தியாவுக்கு 15வது தங்கம்; வட்டு எறிதலில் ஸ்வர்னா ராஜ் அசத்தல்!

 | 
India's 15th gold; Swarna Raj stuns in discus throw!

வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்வர்னா ராஜ் தங்கம் வென்று அசத்தினார். அதிகபட்சமாக 15.66 மீட்டர் தொலைவுக்கு எறிந்து இந்தப் பதக்கத்தை அவர் கைப்பற்றினர்.

ஈரானின் ஷாலா ஹதிதி 15.45 மீட்டர் வீசி வெள்ளியும், வியட்நாம் நிகுவென் தி (14.65 மீ) வெண்கலமும் வென்றனர்.
கலப்பு இரட்டையர் பாட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் மனிஷா ராம்தாஸ் மற்றும் பிரமோத் பகத் ஜோடி வெண்கலப் பதக்கத்தை வென்றது.

மேலும், வில்வித்தை பிரிவில் இந்தியாவின் சுவாதி சவுத்ரி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதுவரையில் 15 தங்கம், 22 வெள்ளி, 30 வெண்கலம் என 67 பதக்கங்களுடன் இந்தியா, புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

Tags