ஜப்பான் ஓபன் டென்னிஸ் - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் கார்லோஸ் அல்காரஸ்!

 | 
Final Tennis match

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில், ஸ்பெயின் நாட்டின் முன்னணி வீரரான கார்லோஸ் அல்காரஸ் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயினைச் சேர்ந்த மற்றொரு வீரரான ஜாமு முனாரை அல்காரஸ் எதிர்கொண்டார். இந்தப் போட்டியின் தொடக்கத்தில் முதல் செட்டை 5-7 என்ற கணக்கில் இழந்தாலும், சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் அடுத்தடுத்த இரண்டு செட்களையும் 6-3, 6-1 என்ற நேர் கணக்கில் கைப்பற்றி அபார வெற்றியைப் பதிவு செய்தார். இதன் மூலம் அவர் தொடர்ச்சியாகத் தனது 9-வது வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளார்.

நடப்பு டென்னிஸ் சீசனில் கார்லோஸ் அல்காரஸ் நுழைந்துள்ள 4-வது ஏடிபி இறுதிப்போட்டி இதுவாகும். சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றுவதற்கான இறுதி ஆட்டத்தில் செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவுடன் (Jiří Lehečka) அல்காரஸ் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

Tags