திருச்செந்தூர் சூரசம்ஹாரம்... 4,000 போலீசார் குவிப்பு! 10 லட்சம் பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு!

 | 
Thiruchendur subramaniya swamy temple

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் நவம்பர் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைக் காண சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷூமகாஜன் கூறுகையில், சூரசம்ஹார நிகழ்ச்சியின்போது பக்தர்களின் பாதுகாப்புக்காக சுமார் 4,000 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார். 

பக்தர்களின் அடிப்படை வசதிகளுக்காக சுமார் 300 தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், விரதம் இருக்கும் பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் 11 இடங்களில் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்த 3 இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட 10 சதவீதம் கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. 

பக்தர்களுக்கு உதவவும் குறைகளைத் தெரிவிக்கவும் 18004252077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், செல்போன் நெட்வொர்க் பாதிப்பைத் தவிர்க்கவும் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Tags