மிஸ் பண்ணாதீங்க... திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கான இலவச தரிசனதுக்கான முன்பதிவு தொடங்கியது!

 | 
Tiruvannamalai karthigai deepam tickets booking open now

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஆகிய புனித நிகழ்வுகளை நேரில் தரிசிப்பதற்கான இலவச நுழைவுச் சீட்டு முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

இத்திருவிழாவில் பங்கேற்க ஆர்வமுள்ள பக்தர்கள், கோயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://annamalaiyar.hrce.tn.gov.in மூலமாக இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.  

ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் தங்களது அடையாளத்தை உறுதி செய்வதற்காகத் தங்களது அடையாள எண்ணைப் பயன்படுத்திப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் உலகப் புகழ்பெற்ற இத்தீபத் திருவிழாவில், பக்தர்கள் எவ்வித சிரமமின்றி எளிதில் தரிசனம் செய்யும் வகையில் இந்த ஆன்லைன் முன்பதிவு முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags