திருப்பதியில் நடிகை தமன்னா சாமி தரிசனம்!

 | 
Actor Thamanna tirumala dharshanam

தென்னிந்திய மற்றும் இந்தித் திரையுலகில் பிஸியான முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, தனது தந்தையுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.

பாரம்பரிய உடையில் அதிகாலையிலேயே ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தந்த நடிகை தமன்னாவுக்கு, ரங்கநாயக்கலு மண்டபத்தில் கோயில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்கி ஆசீர்வாதம் செய்து தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். நாடகம்பாருங்கள்

தரிசனம் முடித்து வெளியே வந்த தமன்னா, அங்குத் தன்னைக் காணக் கூடியிருந்த ரசிகர்களுடன் அன்போடு செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.

Tags