முதல்வர் விஜய் பதவி தப்புமா? ரூ.30 கோடி சொத்து மறைத்த வழக்கில் இன்று விசாரணை!

 | 
Property of RS.30 crore

தமிழக முதல்வர் விஜய், தனக்கு சொந்தமான பண்ருட்டியில் உள்ள ரூ.30 கோடி மதிப்பிலான சொத்தை தேர்தலின் போது தனது வேட்புமனுவில்  குறிப்பிடாமல் மறைத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதி முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பண்ருட்டியில் உள்ள ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து விவரங்களை முதலமைச்சர் விஜய் தனது வேட்புமனுவில் மறைத்து விட்டதாகக் கூறி, வாக்காளர் தினேஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி முதலமைச்சர் விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நிராகரிப்பு மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், "சொத்துகளைக் குறைத்துக் காட்டியதற்காக மட்டும் ஒரு தேர்தலைச் செல்லாது என அறிவித்துவிட முடியுமா?" என்று மனுதாரர் தரப்புக்குக் கேள்வி எழுப்பினார். இவ்வழக்கின் மீதான அடுத்த கட்ட விசாரணையை இன்று (அக்.8) ஒத்தி வைத்து உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

Tags