எம்.எல்.ஏ-க்களின் சம்பளம் ரூ.1.80 லட்சமாக உயர்வு.. அக்.1 முதல் அமலுக்கு வந்தது!
| Oct 22, 2026, 15:03 IST
தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் படிகள் உயர்த்தப்பட்டு, மொத்தம் ரூ.1,80,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுவரை எம்.எல்.ஏ-க்களுக்கு மாத ஊதியமாக ரூ.1,05,000 வழங்கப்பட்டு வந்த நிலையில், அது தற்போது கணிசமாக உயர்த்தப்பட்டு ரூ.1,80,000 ஆக வழங்கப்படவுள்ளது.
இந்த உயர்த்தப்பட்ட தொகையில், மாதந்தோறும் போக்குவரத்துப் படியாக ரூ.75,000 மற்றும் உதவியாளர் படியாக ரூ.25,000 வழங்கப்பட உள்ளது.
திருத்தப்பட்ட இந்த புதிய ஊதிய உயர்வு மற்றும் படிகள் கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பள உயர்வு நடவடிக்கையின் காரணமாகத் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.17 கோடி கூடுதல் நிதிச் சுமை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.