தாராபுரத்தில் 57,158 வாக்குகள் பெற்று சத்தியபாமா முன்னிலை.. தவெகவினர் கொண்டாட்டம்!
தமிழகத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தவெக வேட்பாளர்கள் இரண்டு தொகுதிகளிலும் தங்களது வலுவான முன்னிலையைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளனர்.
தாராபுரம் தொகுதியில் தவெக (சத்யபாமா) 57,158 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக (சுகன்யா): 46,166 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். அதிமுக (பானுமதி): 36,446 வாக்குகள் பெற்றுள்ளார்.
மதுராந்தகம் தொகுதியில் தவெக (மரகதம் குமரவேல்) 56,807 வாக்குகள் பெற்று வலுவான முன்னிலை வகிக்கிறார். திமுக (ஐ. பரந்தாமன்): 41,134 வாக்குகள் பெற்றுள்ளனர். அதிமுக (கணிதா சம்பத்): 36,016 வாக்குகள் பெற்றுள்ளனர்.
இவ்விரு தொகுதிகளிலும் முந்தைய பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது, எதிர்க்கட்சியான அதிமுகவின் வாக்கு வங்கி சரிபாதியாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இறுதிச் சுற்றுக்களின் வாக்கு எண்ணிக்கைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.