“ உடன்பிறப்பே...திரண்டு வா ” - மார்ச் 9ல் திருச்சியில் திமுக மாநாட்டு - ஸ்டாலின் உருக்கமான கடிதம்!

 | 
Trichy DMK STALIN  public meeting

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுகவின் மிக முக்கியமான 'தேர்தல் சிறப்பு மாபெரும் கழக நிர்வாகிகள் மாநாடு' வரும் மார்ச் 9-ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது. இது குறித்து திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு உருக்கமான அழைப்புக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

திருச்சி சிறுகனூரில் நடைபெறவுள்ள இந்த மாநாடு, திமுகவின் தேர்தல் களப்பணிகளுக்கான ஒரு பெரும் தொடக்கமாக அமையவுள்ளது. சுமார் 10 லட்சம் நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில் இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாகச் செய்யப்பட்டு வருகின்றன.

முதலமைச்சர் தனது கடிதத்தில், கிளைக்கழகம் முதல் தலைமைக் கழகம் வரையிலான அனைத்து அணிகளைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் நிர்வாகிகள் பங்கேற்கும் "நிர்வாகிகள் சந்திப்பு மாநாடாக" இது அமையும். கழகம் என்றாலே குடும்பம்தான்" எனக் குறிப்பிட்டுள்ள அவர், அண்ணா மற்றும் கலைஞர் வளர்த்துவிட்ட இந்த 75 ஆண்டுகாலப் பேரியக்கத்தின் வலிமையை இந்த மாநாடு நிரூபிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

மாநாட்டுப் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டு வரும் அமைச்சர் கே.என். நேருவைப் பாராட்டியுள்ள முதலமைச்சர், "நேரு என்றால் மாநாடு, மாநாடு என்றால் நேரு" என அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று, மீண்டும் 2026-ல் 'திராவிட மாடல் 2.0' ஆட்சியை அமைக்க இந்த மாநாட்டில் உறுதியேற்க அழைப்பு விடுத்துள்ளார்.

Tags