தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.. பத்திரம் மக்களே!

 | 
There is a possibility of very heavy rain in tamilnadu..... today!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும்? என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் துரை நேற்று நிருபர்களிடம் கூறுகையில், தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்ப குதி உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. இருப்பினும், தென் மாவட்டங்களில் மிககனமழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதுமட்டு மல்லாமல், வருகிற 26-ந்தேதி வரை தமிழகத்தில் அனேக இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரையில், நாளை (அதாவது இன்று) மற்றும் 24-ந்தேதிகளில் மிதமான மழைக்கும். 25-ந்தேதி கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேலும் வலுவடைந்து மேற்கு தென் மேற்கு திசையில் நகரும்.

இந்நிகழ்வு தொடர்ந்து வலுப்பெற்று புயலாகவும் மாறுவதற்கு சாதகமான சூழல் அதிகமாகவே இருக்கிறது. அந்த புயலின் தாக்கம் தமிழகத்துக்கு இருக்காது. பின்னர் அதுதொடர் பான அறிவிப்பு தெரிவிக்கப்படும்.

அரபிக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஏற்கனவே உருவாகி இருந்தது. அது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து சோமாலிய கடற்கரைப் பகுதிகளை நோக்கி சென்றது. நவம்பரில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாகவே பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதேபோல், இந்த ஆண்டும் பருவமழை ஜனவரி மாதம் 2-வது வாரம் வரை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது” என்றார்.

Tags