தமிழக உள்துறை செயலாளர் மணிவாசன் உட்பட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

 | 
TamilNadu Home Secretary Manivasan & IAS officers transfered!

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளின் முக்கிய செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

உள்துறை செயலாளராக இருந்த மணிவாசன் நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, தமிழ்நாடு சிறுதொழில் மேலாண் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த கார்த்திக் புதிய உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இடம்ஆராய்
 
மின்வாரிய நிர்வாக இயக்குநர் அருண் ராய், நிதித்துறை செலவினங்கள் பிரிவு செயலாளராகவும், நிதித்துறை செலவினங்கள் பிரிவு செயலாளராகப் பணியாற்றிய வெங்கடேஷ், வேளாண் துறை செயலாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

நிலநிர்வாக ஆணையராக இருந்த ராஜேஷ் லக்கானி, மின்வாரிய நிர்வாக இயக்குநராகவும், மின் உற்பத்திக் கழகத் தலைவராகவும் கூடுதல் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆவடி மாநகராட்சி ஆணையராக இருந்த சரண்யா, தாம்பரம் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், செய்யாறு சார் ஆட்சியராக இருந்த அம்பிகா ஜெயின், புதிய ஆவடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குநராக இருந்த சிவகிருஷ்ண மூர்த்தி தேனி மாவட்ட ஆட்சியராகவும், இதுவரை தேனி ஆட்சியராக இருந்த வைத்தியநாதன் குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குநராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags