தமிழ் வம்சாவளி நவனீதம் 'நபி' பிள்ளைக்கு அமைத்திக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

 | 
Noble Peace Prize 2026

2026-ஆம் ஆண்டிற்கான புகழ்பெற்ற நோபல் அமைதிப் பரிசை, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞரும் சர்வதேச நீதிபதியுமான நவனீதம் "நபி" பிள்ளை வென்றுள்ளார் என நார்வே நோபல் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

1941-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் இந்திய தமிழ் வம்சாவளிக் குடும்பத்தில் பிறந்த நவனீதம் பிள்ளை, அந்நாட்டின் கொடுமையான அபார்தீட் இனவெறி ஆட்சிக் காலத்தில் வளர்ந்தவர்.

தீவிர இனக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் வழக்கறிஞராகப் பட்டம் பெற்று, நடால் மாகாணத்தில் சட்டம் பயின்ற முதல் தமிழ் வம்சாவளிப் பெண் வழக்கறிஞர் என்ற பெருமையைப் பெற்றவர். இனவெறிக்கு எதிராகப் போராடியவர்களுக்காகவும், சிறைக் கைதிகளின் உரிமைகளுக்காகவும் உறுதியாகக் குரல் கொடுத்தவர். தென்னாப்பிரிக்காவின் இனவெறி ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, சர்வதேச அரங்கில் பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்துள்ளார்.
ருவாண்டா இனப்படுகொலை வழக்கில் நீதிபதியாகச் செயல்பட்டு, "போர்க் காலத்தில் நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை என்பது வெறும் குற்றமல்ல, அதுவும் ஒரு வகையான இனப்படுகொலையே" என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேசச் சட்ட முன்னுதாரணத்தை நிறுவினார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், 2008 முதல் 2014 வரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தலைமை ஆணையராகவும் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார்.

நீதி மற்றும் மனித உரிமைகளுக்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துள்ள தமிழ் வம்சாவளிப் பெண் நவனீதம் பிள்ளைக்கு நோபல் அமைதிப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதற்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tags