நரேந்திர மோடி சர்வதேச விமான நிலையம்' - நொய்டா விமான நிலையத்தின் பெயர் மாற்றம்!

 | 
Noida international airport name changes to NARENDRA MODI INTERNATIONAL AIRPORT

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பரவலாக 'ஜெவார் விமான நிலையம்' என்று அழைக்கப்பட்டு வந்த இந்த நொய்டா சர்வதேச விமான நிலையம், இனி அதிகாரப்பூர்வமாக "நரேந்திர மோடி சர்வதேச விமான நிலையம்"  என அழைக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

Tags