தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்கள்… ஆட்கள் இல்லாமல் தவிக்கும் திருப்பூர் நிறுவனங்கள்!

 | 
North people started their journey to native people

திருப்பூரில் பணியாற்றி வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளதால், அங்குள்ள பின்னலாடை மற்றும் தொழில் நிறுவனங்களில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

'டாலர் சிட்டி' என்று அழைக்கப்படும் திருப்பூரில் ஆயத்த ஆடை நிறுவனங்கள், நூற்பாலைகள் உள்ளிட்ட ஏராளமான தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுடன் பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர்.

உள்ளூர் தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதால், பல நிறுவனங்கள் வெளிமாநிலத் தொழிலாளர்களையே பெரிதும் நம்பியுள்ளன. இந்த நிலையில், வடமாநிலங்களில் தீபாவளி பண்டிகை 5 நாட்கள் கொண்டாடப்படுவதால், பெரும்பாலான தொழிலாளர்கள் குடும்பத்துடன் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.

தீபாவளி முடிந்த பிறகும் அவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப சில வாரங்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் தொழிலாளர் பற்றாக்குறையால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களை மட்டுமே நம்பியிருக்காமல், உள்ளூரிலேயே திறன்மிகு தொழிலாளர்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் நிறுவனத்தினர் வலியுறுத்தியுள்ளனர்

Tags