நாடு முழுவதும் UPSC தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்... சத்யா IAS அகாடமியின் சிறப்பான முன்னெடுப்பு!
வரும் மே 24-ம் தேதி நடைபெற உள்ள யு.பி.எஸ்.சி (UPSC) முதனிலைத் தேர்வில், பல மாணவர்களுக்குப் பெரும் சவாலாக இருப்பது இரண்டாவது தாளான சிசாட் (CSAT - Civil Services Aptitude Test) எனப்படும் திறனறித் தேர்வு. இந்த சவாலை மாணவர்கள் எளிதாகக் கடக்க உதவும் வகையில், சத்யா ஐ.ஏ.எஸ் அகாடமி ஒரு சிறப்பு முன்னெடுப்பை எடுத்துள்ளது.
யு.பி.எஸ்.சி தேர்வில் பொது அறிவுத் தாளில் அதிக மதிப்பெண்கள் பெற்றாலும், சிசாட் தாளில் தகுதி மதிப்பெண் பெறத் தவறுவதால் பலரது ஐ.ஏ.எஸ் கனவு பாதிக்கப்படுகிறது. இதனைத் தவிர்க்க அகாடமியின் நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர். சத்யா கரிகாலன் இந்த இலவசப் பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
காலை 8 மணி முதல் 9 மணி வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் நேரடி வகுப்புகள் சென்னையில் உள்ள சத்யா ஐ.ஏ.எஸ். அகாடமியின் தலைமையகத்தில் நடைபெறும். முறையான வகுப்புகளுடன், வேகம் மற்றும் துல்லியத்தை அதிகரிக்கத் தனிப்பட்ட வழிகாட்டுதல்களும், தொடர்ச்சியான மாதிரித் தேர்வுகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
மாணவர்கள் தங்களுக்கு வசதியான முறையில் இந்தப் பயிற்சியைப் பெற்றுக் கொள்ளலாம். சத்யா ஐ.ஏ.எஸ் அகாடமியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் வழியாக நேரடி வகுப்புகளை மாணவர்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே காணலாம். இதற்கான கட்டணங்கள் ஏதுமில்லை. யூ-ட்யூப்பில் இலவசமாக மாணவர்கள் பாடத்திட்டங்களையும், வகுப்புகளையும் காணலாம். தங்களது சந்தேகங்களையும் நிவர்த்தி செய்துக் கொள்ளலாம். வகுப்புகளைக் காண: சத்யா IAS அகாடமி YouTube
இது தவிர சென்னையில் உள்ள மாணவர்கள், நேரடியாக சத்யா அகாடமிக்கு வந்தும் இலவச பயிற்சியில் கலந்துக் கொண்டு பயன் பெறலாம். சத்யா ஐஏஎஸ் அகாடமி, சென்னையில், 574 / 1&2, அண்ணா சாலை, தேனாம்பேட்டையில் உள்ள பயிற்சி நிலையத்தில் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
கடினமான கணிதக் கணக்குகள் மற்றும் தர்க்க ரீதியான வினாக்களைக் கையாளும் நுட்பங்களை இந்த வகுப்புகள் மூலம் மாணவர்கள் கற்றுக்கொள்ளலாம். சிசாட் தடையை முறியடிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என அகாடமி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலதிக தகவல்களுக்குத் தேர்வர்கள் அகாடமியை நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
தேர்வு தேதி: மே 24ம் தேதி. பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம். உங்கள் சந்தேகங்களுக்கு 97979 74605 / 93443 34411 என்கிற அலைபேசி எண்களையும், sathyaaias@gmail.com மின்னஞ்சல் முகவரியையும் தொடர்ப்பு கொண்டு பயன் பெறுங்கள். **