சூடானில் டிரோன் தாக்குதல்.. பலி எண்ணிக்கை 153 ஆக உயர்வு!
ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டுப் போர் நீடித்து வரும் நிலையில், எல்லைப் பகுதியில் உள்ள சந்தையைக் குறிவைத்து நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது.
சூடானில் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் ராணுவத்திற்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகத் தொடர் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்நிலையில், சூடான் மற்றும் தெற்கு சூடான் எல்லைப் பகுதியான 'அபியே' என்ற எண்ணெய் வளம் மிக்க பிராந்தியத்தில் உள்ள ஒரு சந்தைப் பகுதியை இலக்காகக் கொண்டு சூடான் ராணுவத்தினர் டிரோன் விமானங்கள் மூலம் அடுத்தடுத்து குண்டுவீசித் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலின் போது, சந்தையில் இருந்த எரிபொருள் சேமிப்புக் கிடங்கில் குண்டுகள் விழுந்து வெடித்ததால் அப்பகுதி முழுவதும் நொடிப் பொழுதில் தீப்பிடித்து எரிந்தது. இதில் ஆரம்பத்தில் 73 பொதுமக்கள் பலியானதாகத் தகவல்கள் வெளியிட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் கவலைக்கிடமாகச் சிகிச்சை பெற்று வருவதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.