பாகிஸ்தானில் பேருந்து விபத்தில் 11 பேர் பலி; 44 பேர் படுகாயம்!

 | 
Pakistan bus accident 11 was died; 44 was injured

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராஜன்பூர் அருகே பயணிகள் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து தேரா காசி கான் மாவட்டத்திற்குப் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பஞ்சாப் மாகாணம் ராஜன்பூர் பகுதி வழியாக சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென அதிவேகமாக வந்த அந்தப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 44 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பஞ்சாப் மாகாண முதலமைச்சர் மரியம் நவாஸ் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

Tags