கார் பந்தயத்தில் வென்ற கோப்பையுடன் தல அஜித்குமார்... சென்னையில் உற்சாக வரவேற்பு!

 | 
Ajith won the cup in car race

சர்வதேச கார் பந்தயப் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வரும் நடிகர் அஜித்குமார், இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரைக் காண விமான நிலையத்தில் திரண்ட ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

'அஜித் ரெட்ஆண்ட் பை விராஜ்' (Ajith RedAnt by Virage) அணியின் சார்பில் சர்வதேசப் பந்தயங்களில் பங்கேற்று வரும் அஜித்குமார், தனது பந்தயப் பயணத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற 24H பார்சிலோனா பந்தயத்தில் அவரது அணி இரண்டாவது இடத்தைப் பிடித்து மேடையேறியது.கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற 24H பார்சிலோனா பந்தயத்தில் அவரது அணி இரண்டாவது இடத்தைப் பிடித்து மேடையேறியது. 

இந்த நிலையில், அவர் சென்னை திரும்பியபோது ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். விமான நிலைய வருகை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

திரையுலகில் மட்டுமின்றி கார் பந்தயத்திலும் ஆர்வத்துடன் செயல்பட்டு வரும் அஜித்குமாரின் வருகை ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags