‘தஞ்சாவூரு மண்ணெடுத்து..” தேவாவின் ஆஸ்தான பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்!

 | 
'Tanjavur Mannuedu....'Deva's Asthana singer Krishnaraj passes away!

பிரபல தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் (75) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.

சேலம் மாவட்டம் வெம்படித்தாளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கிருஷ்ணராஜ், மறைந்த பிரபல இசையமைப்பாளர் தேவாவின் ஆஸ்தான பாடகர்களில் ஒருவராவார். தமிழில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், பல்வேறு புகழ்பெற்ற பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். தெற்காசியஇசை கேள்

'பொற்காலம்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தஞ்சாவூரு மண்ணு எடுத்து' மற்றும் 'வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா' உள்ளிட்ட பல புகழ்பெற்ற பாடல்கள் இவருக்குத் திரைத்துறையில் தனி அடையாளத்தைப் பெற்றுத் தந்தன. அவரது மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Tags