நடிகை ராஷ்மிகா 8 பக்கத்தில் உருக்கமான கடிதம்... "1000 முறைகூட விஜய் தேவரகொண்டாவைத் திருமணம் செய்வேன்"!

 | 
Actor Rashmika inspired about vijaydeyvar konda

நடிகர் விஜய் தேவரகொண்டாவுடனான தனது காதல், திருமணம் மற்றும் சமீபத்திய பேட்டி குறித்துச் சமூக வலைத்தளங்களில் உருவான விமர்சனங்களுக்கும் ட்ரோல்களுக்கும் பதிலளிக்கும் வகையில், நடிகை ராஷ்மிகா மந்தனா 8 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தபோது விஜய் மட்டுமே எனக்குத் துணையாக நின்றார். எங்கள் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், யாருடன் வாழ வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை எங்களுக்கு மட்டுமே உள்ளது" என்று தெரிவித்துள்ளார். 

" என்னைப் பற்றிய விமர்சனங்களை நான் ஏற்றுக் கொள்வேன்; ஆனால் எங்கள் குடும்பத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் விமர்சிப்பது பெண்ணியம் அல்ல, அது அப்பட்டமான 'புல்லியிங்' " எனக் காரசாரமாகச் சாடியுள்ளார். 

"உங்களை ஆழமாக நேசிக்கும் ஒருவரைக் கண்டறியுங்கள். திருமணம் முடிந்த பிறகும் கூட, 'நாம் மீண்டும் திருமணம் செய்து கொள்வோமா?' என்று அவரிடம் கேட்கத் தோன்றும் அளவுக்கு அவர் மீது காதல் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவரை நூறு முறை அல்ல, 1000 முறைகூட நான் மீண்டும் திருமணம் செய்வேன்." 

"ஆம், நான் என் கணவர் மீது தீராத காதல் கொண்டிருக்கிறேன்; இதில் என்ன தவறு இருக்கிறது? நான் திருமணம் செய்துகொள்ளும் ஆண் மீது காதல் கொள்ளவில்லை என்றால், அவரை ஏன் திருமணம் செய்ய வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

தங்கள் காதலைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள், தங்களுக்குப் பிடித்தமான வாழ்க்கையை வாழ்வதில் கவனம் செலுத்தலாம் என்றும் ராஷ்மிகா அந்த அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளார்.

Tags