'2பாயிண்ட்4 சில்ட்ரன்' பட பிரபலம்... ஹாலிவுட் நடிகை ஜார்ஜினா காலமானார்!

 | 
2 Point 4 Children' star.... Hollywood actress georgina dies!

'2பாயிண்ட்4 சில்ட்ரன்' என்ற புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடர் மற்றும் 'அன் ஆஃபுல்லி பிக் அட்வென்ச்சர்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை ஜார்ஜினா கேட்ஸ் (51) காலமானார். டிவிஷோக்கள் பார்

இவரது மறைவுச் செய்தியை அவரது மகள் நையா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். 1990-ஆம் ஆண்டுகளில் தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கிய ஜார்ஜினா கேட்ஸ், ஹக் கிராண்ட் மற்றும் ஜோவாகின் ஃபீனிக்ஸ் போன்ற சர்வதேச முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு சிறந்த திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைத்துறையில் தனக்கெனத் தனித்துவமான இடத்தைப் பிடித்த நடிகை ஜார்ஜினா கேட்ஸின் திடீர் மறைவுச் செய்தி ஹாலிவுட் திரையுலகினரிடையேயும் அவரது ரசிகர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Tags